– உரிய பதில் அளிப்பாரா அமைச்சர் கீதாஜீவன்.!
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளி்ர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாருமான கீதாஜீவனின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி,மருத்துவமனை,பயிற்சி நிலையங்கள், விளையாட்டு பயிலரங்கம், வாட்டர் கம்பெனி உள்ளிட்ட எண்ணற்ற தொழிலகங்கள் உள்ள நிலையில் உப்பு உற்பத்தி நிறுவனமும் ஒன்றாகும்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அமைச்சர் கீதாஜீவனின் மகன் மகிழ்ஜான் சந்தோஷ் / மகிழ்ஜீவன் பெயரில் தூத்துக்குடி போல்பேட்டை முகவரியாக கொண்ட MAGHIL Aqua product நிறுவனத்தில் Nice Salt உப்பு உற்பத்தி (FSSAI: 1244029000120) செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையி்ல் அமைச்சரின் மகன் பெயரிலான Nice Salt உப்பு உற்பத்தி நிறுவனத்திற்காக சுமார் 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆட்டைய போட்டதாக எதிர்க்கட்சியான அதிமுக சார்பிலான புகைப்பட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்,
“சத்துணவு முட்டை பேமஸ் அமைச்சர் சால்ட் மேட்டர்ல அசால்டா சிக்கியிருக்காங்களாம்”
குஜராத் மாதிரி டெக்னாலஜியை யூஸ் பண்ணி உப்பு உற்பத்தியை அதிகரிக்கனும்., இளைஞர்களை அதிக அளவு உப்பு உற்பத்தி தொழில்ல ஈடுபடுத்தனும்னு., இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு உப்பு மாநாட்டில் அமைச்சர் கீதாஜீவன் பேசுனாங்க.
“சொன்னத செய்யுறதுதான் பரம்பரை பழக்கமாச்சே “
அதனால அமைச்சர் கீதாஜீவன் மகன் மகிழ்ஜீவன் பெயர்ல Nice Salt கம்பெனி உப்பு உற்பத்தியும் நடத்துனாங்க, நல்ல விஷயம் தானேனு தோனும் ஆனால்,
“யாரோ அமைச்சராம்., யாரோ அமைச்சரோட மகனாம்., ஏதோ 2000 ஏக்கர்ல உப்பளமாம்., உப்பளத்துக்காக 200 ஏக்கருக்கு மேல அரசு புறம்போக்கு நிலத்த ஆட்டைய போட்டாங்களாம்., கூடவே 3 குடோன் கட்னாங்களாம்.”
தூத்துக்குடி பக்கம் முள்ளக்காடு முத்தையாபுரம் ஊரு பேராம், தூத்துக்குடி சின்னவர் பெயரில் 2000 ஏக்கராம் பேசிக்கிட்டாங்கப்பு.
இவ்வாறு பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாட்ஸ் குழு பதிவுகளுக்கே போனில் அழைத்து மிரட்டும் அமைச்சர் கீதாஜீவன், தனது மகன் பெயரிலான உப்பு உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்த ஆட்டைய போட்டதாக எதிர்க்கட்சியான அதிமுக புகைப்படத்துடன் பதிவுகள் வெளியிட்டுள்ள நிலையில் அமைச்சர் பதிலளிக்காமல் மௌனம் காப்பது எதனைக் குறிக்கிறது.
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா என தூத்துக்குடி மக்கள் பேசத் தொடங்கியுள்ள நிலையில் வரும் 2026 பொது தேர்தலில் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீதான பல்வேறு நில அபகரிப்பு ஆவணங்கள் பேசு பொருளாக்கப்படும் என எதிர்க்கட்சி தரப்பில் கூறப்படுகின்றன.





