– விவரப் பட்டியல் தகவல்.!
தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகளின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கான அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கான 2025 ஆம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களானது தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலப்பைப்பட்டி, மேல மீனாட்சிபுரம், இராமசந்திரபுரம், எஸ்.புதூர், நடுவக்குறிச்சி, அம்மாள்பட்டி, தென்னம்பட்டி, மேலப்பூவாணி, கொல்லங்கிணறு, கீழப்பூவாணி, இளவேலங்கால், வல்லக்குளம், கல்லத்திக்கிணறு, அகிலாண்டபுரம், பனையூர், வேப்பங்குளம், சாமிநத்தம், தங்கமணிநகர், ஆரைக்குளம், பெரியநத்தம், தருவைகுளம், ஆலந்தா, மருதன்வாழ்வு, மாப்பிள்ளையூரணி கே.எஸ்.நகர், குறுக்குச்சாலை, பரிவில்லிக்கோட்டை, சவலாப்பேரி, சிந்தலக்கோட்டை, வடமலாபுரம், நாரைக்கிணறு, மணியாச்சி, சொக்கநாதபுரம், மேட்டூர், புதியம்புத்தூர், குலசேகரநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன.
இத்தகைய சூழலில் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கான பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணையை வாங்கித் தருவதாக கூறி பணிநியமன லஞ்ச தொகையில் பாதியான ரூ 3 லட்சம் அட்வான்ஸ் வீதம் பல லட்சங்களை பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில்
கல்லத்திக்கிணறு கிராமத்தை சேர்ந்த கீர்த்திகா,பிரான்சிஸ்கா, விஜயசுதா, மற்றும் மரியஜெசி,
அயிரவன்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாராணி,
தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாரதா ஜான்சிராணி,
அம்மாள்பட்டி கிராமத்தை சேர்ந்த காயத்திரி மற்றும் தில்லை,
மணியாச்சி பகுதியை சேர்ந்த தம்புராட்டி,
எஸ்.புதூர் கிராமத்தை சேர்ந்த ராமலெட்சுமி,
ஓசநூத்து கிராமத்தை சேர்ந்த ராஜலெட்சுமி,
வேப்பன்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெனிட்டா,
மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த விஜயலெட்சுமி, மற்றும் மல்லிகா,
முப்புலிவெட்டி கிராமத்தை சேர்ந்த சுகாசினி,
புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த யமுனா மற்றும் நந்தினி,
என சுமார் 17 க்கும் மேற்பட்ட நபர்களின் உறவினர்கள் மூலமாக அங்கன்வாடி பணிநியமனம் பெற்று தருவதாகக் கூறி பல லட்சங்களை ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா வாங்கிச் சுருட்டியுள்ளதாக ஆதாரப்பூர்வமாக தெரிய வருகிறது. தொகுதி மக்களுக்கு பணியாளராக இருக்க வேண்டிய எம்எல்ஏ சண்முகையா, தற்போது வேலை வாய்ப்புகளை கூறி மக்களிடமிருந்து கோடிகளை வசூலித்து தன்னுடைய சொத்துமதிப்பை உயர்த்திவரும் இத்தகைய செயல் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தகுதியான நபர்களுக்கே பணி எனும் நிலை இருக்கும்போது இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.






