Home முக்கிய செய்திகள். ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உதவியாளர் மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்...

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உதவியாளர் மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொன்கற்பகராஜ் என்பவர் கைது.!

44
0

சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் கொலைமுயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் தொடர்புடைய திமுக நிர்வாகி.!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த சண்முகையா. இவருக்கு நெருக்கமாக இருக்கக்கூடியவர்கள் அடுத்தடுத்து கைதாகி வருவது பெரும் கேள்விக்கு உள்ளாகி வருகின்றன.

இந்நிலையி்ல் ஓட்டப்பிடாரம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரும், ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உதவியாளருமான தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்த பொன் கற்பகராஜ் த/பெ ராமமூர்த்தி என்பவர், பாலஜெகதீஷ் என்பவரிடம் ரூ 50,000 மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பிக் கேட்க சென்ற நபரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாக பொன்கற்பகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்துறையினர் அவரை பேரூரணி சிறையில் அடைத்தனர்.

மேலும் திமுக நிர்வாகியான பொன் கற்பகராஜ் என்பவர் மீது 468 மதுப்பாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தியதாக உள்ளிட்ட மூன்று வழக்குகள் உள்ள நிலையில் தற்போது கைதாகி இருப்பது ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவிற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் சிலைக் கடத்தலில் கைதான ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையாவின் உதவியாளர் விக்னேஷ் கைதாகி விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்ட அதே சூழலில்தான் எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் நில மோசடி வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையிடைக்கப்பட்ட நிலையில் தற்போது ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரும், திமுக எம்எல்ஏ சண்முகையாவின் மற்றொரு உதவியாளர் பொன் கற்பகராஜ் கைதாகி இருப்பது ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here