தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சுமார் 28 கிலோ எடையுள்ளஐம்பொன் சிலைக் கடத்தல் விவகாரத்தில் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி உட்பட நான்கு பேரை கைது செய்தது திருநெல்வேலி மண்டல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைமையிலான காவல்துறை.
விசாரணையில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி நிர்வாகியின் வங்கி கணக்கிற்கு ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் வங்கி கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை நடைபெற்றதற்கான உண்மைநிலையை கண்டறிந்த விசாரணை அதிகாரிகள், இச்சிலை கடத்தல் விவகாரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏதேனும் திட்டமிட்டிருந்தார்களா எனும் கோணத்தில் எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய அண்ணன் அயிரவன்பட்டி முருகேசனை தொடர்புக் கொண்டதாக தெரிகிறது.
இதனயைடுத்து அரசியல் எதிர்காலம் கருதி திமுகவின் முக்கியதஸ்தர்களை வைத்து பல கட்ட பேச்சுவார்த்தையானது சுரண்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ₹20 லட்சம் கைமாறியதைத் தொடர்ந்து மேலிட அழுத்தத்தின் காரணமாக இவ்வழக்கு விசாரணையில் இருந்து ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய அண்ணன் அயிரவன்பட்டி முருகேச ன் ஆகிய இருவரும் தன்னை விடுத்துக் கொண்டதாகவும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் திமுக எம்எல்ஏ விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக கையிலெடுக்கக் கூடும் என்பதால் குறுகிய வட்டத்தில் இச்சிலை கடத்தல் விவகாரம் முடித்து வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





