– மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை விசாரிக்க வேண்டும்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதிகளை சுற்றியுள்ள ஸ்பிக் நகர் பகுதி, முட்டைக்கடை பகுதி மற்றும் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள இடங்களில் மூன்று அரசு மதுபானக் கடைகளும் அதனுடன் கூடிய பார்களும் இயங்கி வருகின்றன.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடைகளில் இரவு 9 மணியளவில் தினசரி 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை சாக்குமுட்டைகளில் வாங்கி அதனை முள்ளக்காடு பகுதியின் நேசமணி நகர் முக்கு, ராஜீவ் நகர், முனியசாமி நகர் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உதவிடன் அவருடைய உதவியாளரும் ஓட்டப்பிடாரம் ஓன்றிய திமுக தொழில்நுட்ப அணி நிர்வாகியுமான பொன் கற்பகராஜ் என்பவர் தலைமையில் நாள்முழுவதும் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் முத்தையாபுரம் காவல்நிலையத்திற்கு அவ்வப்போது ஓட்டப்பிடாரம் எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் முறையாக மாமூல் வழங்கப்பட்டு வருவதாகவும், மதுவிலக்கு காவல்துறையினர் இத்தகைய திருட்டுத்தனமான சம்பவங்களை அறிந்தும் கண்டுக்கொள்வதில்லை எனவும்,ஒரு சில நல்ல எஸ்ஐக்கள் வந்தால் வழக்கு போடுகிறார்கள், அதனையும் எம்எல்ஏ போன் செய்து ஆப் பண்ணி விடுகிறார் என அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

ஏற்கனவே முள்ளக்காடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உதவியாளர் பொன் கற்பகராஜ் என்பவர் மீது 468 மதுபாட்டில்கள் மற்றும் 55 மதுபாட்டில் கடத்தியதாக இரண்டு வழக்குகள் (127/2024, 43/2025) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சட்டவிரோதமான செயல்களை செய்து வரும் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் மற்றுமொரு வருமான யுக்திதான் இந்த சட்டவிரோத மதுவிற்பனையாகும். பகல் முழுவதும் கூடவே வலம் வரும் தனது உதவியாளரை வைத்து இரவு நேரங்களில் இவ்வாறான மதுவிற்பனை கடத்தலில் ஈடுபடுத்தி ( நாள் ஒன்றுக்கு 200×40 = 8000 வீதம் மாதம் 2 லட்சத்திற்கும் மேல் வருமானம்) அப்பகுதி கட்சி பணிகளின் செலவுகளுக்கு பயன்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இதுபோன்ற சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் மதுகடத்தல் சம்பவங்களை கண்டும் காணாமல் தூங்குகிறதா அல்லது மாமூல் வசூலில் திளைக்கிறதா என பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆளுங்கட்சியின் எம்எல்ஏ சண்முகையாவின் ஆதரவில்/உதவியுடன் நடைபெற்று வரும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு தடுத்திட வேண்டும்.





