– எம்எல்ஏ சண்முகையாவிற்கு மீண்டும் மறுக்கப்படும் சீட்.!
“200 தொகுதிகள் வெல்வோம் வரலாறு படைப்போம்” எனும் மிஷன் 200 இலக்கை மையமாகக் கொண்டு தேர்தல் வியூகங்களை தொடங்கியுள்ள திமுகவிற்கு கடந்த 2021 தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தேர்தல் வேலைகளை செய்து வந்தது. தற்போது முதல்வர் ஸ்டாலினின் மருமகன் நிறுவனமான PEN (Populus Empowerment Network) தேர்தல் அமைப்பு மற்றும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து Show Time நிறுவனங்கள் இணைந்து வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான முன்னோட்ட வேலைகளை/களப் பணிகளை செய்ய தொடங்கியுள்ளன.
இத்தகைய தேர்தல் நிறுவனங்கள் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே களப்பணிகளையும் தொகுதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளன. இந்த அடிப்படையில் திமுக எம்எல்ஏக்கள் 125 பேரில் 50 எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் மிக மோசமாகவும்,தொகுதி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அடைந்துள்ள எம்எல்ஏக்களை நீக்கிவிட்டு பெண்கள் மற்றும் புதுமுக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன எனவும் இதுதொடர்பாக தொகுதிக்கு மூன்று பேர் பட்டியல் ரெடி என திமுக தலைமை அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் தொகுதிகளில் குறைந்த வாக்கு சதவிகிதம் பெற்ற தொகுதிப்பட்டியல் அதன் முக்கிய நிர்வாகிகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கள ஆய்வுகளின்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் தொகுதி மிகக் குறைந்த வாக்குவங்கியை பெற்றுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மொத்தமுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் கோவில்பட்டி அதிமுக வசமும், ஸ்ரீவைகுண்டம் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ வசமும் உள்ளது. மீதமுள்ள விளாத்திகுளம் தொகுதியில் 54% சதவிகிதமும், தூத்துக்குடி தொகுதியில் 49% சதவிகிதமும்,திருச்செந்தூர் தொகுதியில் 51% சதவிகிதமும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 41% சதவிகிதமும் திமுக வாக்கு சதவிகிதங்களை பெற்றுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட திமுகவின் வாக்குவங்கியில் ஓட்டப்பிடாரம் கடைசி இடத்தில் உள்ளதாகவும் இதன் புள்ளிவிவர அறிக்கைகள் மற்றும் தொகுதி மக்களின் பல்வேறு அதிருப்திகளை ஏற்படுத்தி மரும் களப்பிண்ணனியின் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையாவிற்கு வரும் தேர்தலில் சீட் இல்லை என Pen மற்றும் Show Time உள்ளிட்ட தேர்தல் வியூக அலுவலக வட்டாரங்களிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.





