Home முக்கிய செய்திகள். திமுக கூட்டணியில்  தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சி பேச்சுவார்த்தை.!

திமுக கூட்டணியில்  தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சி பேச்சுவார்த்தை.!

40
0

கோவில்பட்டியில் விஜய பிரபாகரன், ஓட்டப்பிடாரத்தில் ஷ்யாம் கிருஷ்ணசாமி போட்டியா.?

அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை; நிரந்தர எதிரியுமில்லை எனும் அரசியல் மொழி வாக்கியத்தின் பொருள்விளக்கங்கள் தேர்தல்காலங்களில் புலப்படக்கூடிய ஒரு கூற்றாகும். வரும் 2026 ல் இந்தியாவில் பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்களுக்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் எந்த மாநிலத்திலும் இல்லாத அரசியல் சூறாவளி தற்போதே தமிழ்தாட்டில் மய்யம் கொள்ள தொடங்கிவிட்டன என சொல்லிவிடலாம். அந்த வகையில் ஆளும்கட்சி திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு, எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என தங்களது தேர்தல்கள/மக்கள் சந்திப்பு பிரவேசத்தை ஸ்டானினும் எடப்பாடி பழனிச்சாமியும் தொடங்கிவிட்டனர்.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என பலமுனை போட்டியாக இருந்தாலும் இக்கட்சிகளுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளன எனும் கேள்விகள் இன்றைய அரசியல் மேடைகளில் முக்கிய விவாதமாக உள்ளன. இந்நிலையி்ல்  தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சி திமுக கூட்டணியில் சேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், திமுகவின் தெண்மண்டல தேர்தல் தொகுதிப் பொறுப்பாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழியுடன் இதுதொடர்பாக பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் திருவைகுண்டம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் காங்கிரஸ, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியை சேர்ப்பதின் மூலம் தெண்மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் வாக்குகளை பெற திமுக தனது முயற்சியை தொடங்கியுள்ளது. இவ்வாறு திமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் சேரும்பட்சத்தில் கோவில்பட்டியில் விஜய பிரபாகரனும் ஓட்டப்பிடாரத்தில் ஷ்யாம் கிருஷ்ணசாமியும் களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டதோ இல்லையோ தூத்துக்குடியின் பல தொகுதிகளில் படுபயங்கரமாக சூடுபிடிக்க தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். கூட்டணி என்பது தேர்தல் வெற்றிகாக என்றில்லாமல் மக்களின் சேவைக்காக இருந்தால் நலமாக இருக்கும் என்பதே அனைத்து மக்களின எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here